Proud to be a part of tamil diaspora

08Sep08
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசன்

இன்று சற்று வித்யாசமாக தமிழில்  குறிப்பெடு எழுதலாம் என்று ஆசை கொண்டேன்   ..:)

இன்று நான் அறிந்த தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள் தமிழின் பெருமையை முழுவதும் உணர்வதில்லை .

இங்கு வந்த பிறகு தான் என்னாலும் உணர முடிந்தது.  😦  .உலக அரங்கில் மற்ற  இந்திய மொழிகளை விட தமிழ் தனித்து விளங்கு கிறது.மற்ற மொழியர்கள் தமிழின் பெருமையை நன்கு அறிந்து உள்ளனர்.

சில தகவல்கள்:

தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில்தமிழ்நாடு மாநிலத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்பாண்டிச்சேரி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்குஅரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு முகமை மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 525 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து [6] இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.[7]

இப்படிப்பட்ட ஒரு இனிமையான மொழியை தாய் மொழியாக கொண்டதில் பெருமையும் மகிழ்ச்சியும்  அடைகிறேன் ..வாழ்க தமிழ்!! வளர்க தமிழ் !!

நன்றி
 விக்கிப்பெடிய( தகவல்மற்றும் க்வில்‌ப்யாட்(தமிழ் எழுத்துகள்  உபயோகிப்பதற்கு)..



No Responses Yet to “Proud to be a part of tamil diaspora”

  1. Leave a Comment

Leave a comment